டாஸ்மாக் விற்பனை நேரத்தில் மாற்றம்? - மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பு என தகவல்
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் கடந்த இரு தினங்களாக திறக்கப்படுகின்றன. சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட ஏழு வண்ணங்களில் டோக்கன் வழங்கி, மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இனி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மது விற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story

