பேருந்து நிலையங்களில் இயங்கிய தற்காலிக காய்கறி சந்தைகள் அகற்றம் - தயார் நிலையில் உள்ள கோவை பேருந்து நிலையங்கள்

4-ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில், பேருந்து நிலையங்களில் இயங்கிய தற்காலிக காய்கறி சந்தைகள் அகற்றப்பட்டன.
பேருந்து நிலையங்களில் இயங்கிய தற்காலிக காய்கறி சந்தைகள் அகற்றம் - தயார் நிலையில் உள்ள கோவை பேருந்து நிலையங்கள்
x
கொரோன பரவலை தடுக்கும் வகையில், காய்கறி சந்தைகள் பேருந்து நிலையங்களுக்கு மாற்றப்பட்டன. இதனால் கோவை உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் அனைத்தும் தற்காலிக காய்கறி சந்தைகளாக செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இன்று முதல் பேருந்துகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்று அரசு அறிவித்தது. அதனால் பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த காய்கறிசந்தைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு, முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது .

Next Story

மேலும் செய்திகள்