தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெப்பம் தணிந்த‌தால் மக்கள் மகிழ்ச்சி

ஆம்பன் புயல் மற்றும் கோடை வெப்பம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெப்பம் தணிந்த‌தால் மக்கள் மகிழ்ச்சி
x
கோவை

கோவை மாநகர் பகுதியிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்த‌து. காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், ஆர்எஸ்புரம், சிங்காநல்லுர் பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் மரக்கிளைகள் உடைந்து, சாலையில் மின்கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்தன. 

ஒசூர் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்த‌து. பெட்டமுகிலாளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்த‌து. தற்போதைய மழை, மானாவாரி பயிர்களுக்கு ஏதுவானதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தஞ்சை 

தஞ்சை மாவட்டம் வல்லம், அம்மாபேட்டை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்சி (காதர், இஸ்லாம்)

திருச்சி மாநகர், மணப்பாறை பகுதியில் கனமழை  பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

Next Story

மேலும் செய்திகள்