அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க ஏற்பாடு - சனிக்கிழமையும் அரசு அலுவலகங்கள் இயங்க நடவடிக்கை
தலைமை செயலக ஊழியர்கள் உட்பட, அனைத்து அரசு ஊழியர்களும், இன்று முதல், தங்கள் சொந்த செலவில் அலுவலகம் வர உள்ளனர்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில், அனைத்து துறைகளும் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன. அந்த ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவை தமிழக அரசே ஏற்றது.
இந்நிலையில், ஊரடங்கின் 4ஆவது கட்டம் இன்று தொடங்கும் சூழலில் அரசு அலுவலகங்கள் அனைத்தும், முழுமையாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்கள், சுழற்சி முறையில், இரண்டு, இரண்டு நாட்களாக பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பேருந்து கட்டணத்தை, அரசு ஊழியர்கள் தான் செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
சனிக்கிழமையும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவித்துள்ள அரசு, அரசு துறைகளின் தலைவர்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Next Story

