தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு தேர்வு மையங்கள் காலியாக உள்ள இடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு - சிறப்பு தேர்வு மையங்களுக்கு செல்ல ஆசிரியர்கள் தயக்கம் என தகவல்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு தேர்வு மையங்கள்  காலியாக உள்ள இடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு - சிறப்பு தேர்வு மையங்களுக்கு செல்ல ஆசிரியர்கள் தயக்கம் என தகவல்
x
பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்க கூடிய மாணவர்களுக்கு , அந்தப் பகுதிக்கு உள்ளேயே சிறப்பு தேர்வு மையத்தை ஏற்படுத்தி தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உட்பட பல்வேறு இடங்களில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் காலியாக உள்ள வீடுகள் மற்றும் சமூக நலக் கூடங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பது குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனாலும்   தடை செய்யப்பட்ட பகுதியில் தேர்வு மையங்களை அமைத்தால் அங்கு சென்று தேர்வு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்