டாஸ்மாக் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டாஸ்மாக் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
டாஸ்மாக் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
x
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றாததை அடுத்து ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று  விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை, நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.கே. கவுல், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.



Next Story

மேலும் செய்திகள்