அரசு மருத்துவமனைகளில் ஐசிஎம்ஆர் வழங்கிய மருந்துகளை சோதிக்க தமிழக அரசு முயற்சி

தமிழகத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் அண்மையில் நான்கு வகையான மருந்துகளை வழங்கியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஐசிஎம்ஆர் வழங்கிய மருந்துகளை சோதிக்க தமிழக அரசு முயற்சி
x
மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிக்குளோராக்குயின் மருந்துடன், அமெரிக்காவின் கிலியட்  மருந்து  நிறுவனத்தின் தயாரிப்பான ரெம்டிசிவிர் மருந்து லோப்நவிர் ரெட்னோவர் பிளஸ் மாத்திரை ,லோப்நவிர் ரேட்னோவர் இன்டர்பெரான் பீட்டா ஆகிய மருந்துகளை, நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில் வழங்க வலியுறுத்தப்பட்டது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் நான்கு மருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. விருப்பம் தெரிவிக்கும் நோயாளிகளுக்கு உடல்நிலையைப் பொருத்து மருந்துகள் பரிசீலனை செய்யப்பட உள்ளது.

ரெம்டிசிவிர் மருந்து 10 நாட்களுக்கும், ஹைட்ராக்ஸிக்குளோரோக்குவின், மாத்திரையாக நாளொன்றுக்கு இருவேளை தொடர்ச்சியாக 10 நாட்கள் வரை கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோப்நவிர் ரெட்னோவர் பிளஸ் மாத்திரை 14 நாட்களுக்கு 2 வேளையும், லோப்நவிர் ரேட்னோவர் இன்டர்பெரான் பீட்டா  ஊசி, 6 நாட்கள் நோயாளிகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்