"ஊரடங்கில் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல்" - அரசு நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு
பதிவு : மே 13, 2020, 08:29 AM
ஊரடங்கால் வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊரடங்கால் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண்துறை சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தோட்டக்கலை மற்றும் உணவு பாதுகாப்பு துறை மூலம் விளை பொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவரை 6 ஆயிரம்  மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்களை ஆயிரத்து100 மொபைல் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நிலக்கரி இறக்குமதி தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு இன்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 views

பிற செய்திகள்

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

33 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

253 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

136 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

316 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

80 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.