ஆன்-லைன் மது விற்பனை சாத்தியமா? - மது விநியோகத்தில் இறங்கும் சொமோட்டோ?

ஆன்லைனில் மதுவிற்கலாம் என நீதிமன்றங்கள் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் அது சாத்தியமா?
ஆன்-லைன் மது விற்பனை சாத்தியமா? - மது விநியோகத்தில் இறங்கும் சொமோட்டோ?
x
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது சில தளர்வுகள் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

* தமிழகம் உள்ளிட்ட பல  மாநிலங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என்பதால் சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

* அதனை விசாரித்த நீதிபதிகள் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஆன்-லைன் மது விற்பனை நேரடி தொடர்பில்லாத விற்பனை உள்ளிட்ட வழிகளை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

* தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே அவற்றை மூடுவதற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் ஆன்-லைன் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது.

* இந்த நிலையில், உணவு விநியோக தொழிலில் உள்ள 'சோமோட்டோ' போன்ற நிறுவனங்கள் மது விநியோகத்தில் இறங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்