மருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து

அரசு மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும், காவல் துறையினரும் மேற்கொள்ளும் பணிகளுக்கு,அவர்கள் பெறும் ஊதியம் ஈடானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து
x
கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடர்ந்திருந்தார்.

* இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 * அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசிடம், 37 ஆயிரத்து 648 முழு உடல் கவசங்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரம் என் -95 முக கவசங்களும்,7 லட்சத்து 75 ஆயிரத்து 106 மூன்று மடிப்பு முக கவசங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

* 14 ஆயிரம் பரிசோதனை கருவிகள் தற்போது இருப்பில் இருப்பதாகவும்உணவின்றி எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

* இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அடிக்கடி பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

*மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவுக்கு எதிராக நாள் முழுவதும் போராடும் அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம், அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

* அவர்களின் சேவையை பாராட்டி, மத்திய - மாநில அரசுகள்  அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்