கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணி - அண்ணா பல்கலைக் கழகம் தீவிரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணி - அண்ணா பல்கலைக் கழகம் தீவிரம்
x
தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தபட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை கண்காணிக்க, புவி தகவல் அமைப்பு  எனப்படும் முறையில் செயற்கைகோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்க தமிழக அரசுக்கு உதவும் வகையில் அண்ணா பல்கலைக் கழகம் பணியை தொடங்கி உள்ளது. கொரோனா நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் இந்த வரைபடம் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கண்காணிப்பில் உள்ளவர்களின் முகவரிகள் சுகாதாரத் துறையால் அண்ணா பல்கலைக் கழகத்திடம் வழங்கப்பட்டு உள்ள நிலையில், இந்த தரவுகளை கொண்டு  குறிப்பிட்ட நபர்களின் வீடு, வசிப்பிடம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்