தமிழகத்தில் கூடுதல் கொரோனா பரிசோதனை கூடங்கள் - நடவடிக்கை

தமிழகத்தில் மேலும் 13 அரசு மருத்துவ கல்லூரிகளில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை கூடங்களை அமைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் கூடுதல் கொரோனா பரிசோதனை கூடங்கள் - நடவடிக்கை
x
தமிழகத்தில் மேலும் 13 அரசு மருத்துவ கல்லூரிகளில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை கூடங்களை அமைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றை  உறுதி செய்யும் மருத்துவ பரிசோதனை கூடங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் Reverse Transcription Polymerize Chain Reaction  எனப்படும்  மருத்துவ பரிசோதனை  மூலம்  கொரோனா வைரஸ்  தொற்று உள்ளதா, இல்லையா என்பது உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது  அரசு சார்பில் 12  பரிசோதனை கூடங்களும்,  தனியார் மருத்துவமனை சார்பில் 7 பரிசோதனை கூடங்களும் மத்திய அரசின் ஒப்புதலுடன் இயங்கி வருகின்றன. சென்னையில் உள்ள 3  மருத்துவ பரிசோதனை கூடங்களை தவிர்த்து மீதமுள்ள 36  மாவட்டங்களுக்கு  அரசு சார்பில் 9 பரிசோதனை கூடங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இதனால்  மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளின் ரத்த மாதிரிகளை ஆய்வகங்களுக்கு எடுத்து செல்வதில் கால தாமதம் ஏற்பட்டு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  தனியார் மருத்துவமனை பரிசோதனை கூடங்களில் கொரோனா தொற்று குறித்து பரிசோதிக்க 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவு ஏற்படுவதால்,  அரசின் 12 பரிசோதனை  கூடங்கள் மூலமாகவே பெரும்பாலும்  கொரோனா தொற்று குறித்து பரிசோதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் 13 அரசு மருத்துவ கல்லூரிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை கூடங்களை அமைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 30  கொரோனா தொற்று பரிசோதனை கருவிகளை வாங்கியுள்ள  தமிழக சுகாதாரத்துறை , மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் கொரோனோ தொற்று ஆய்வுகளை 24 மருத்துவ கல்லூரிகளிலும் உடனடியாக   பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்