உயர்நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை - சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்

உயர்நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் காணொலி காட்சி வாயிலான விசாரணை நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் விசாரணை - சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்
x
இது தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்குதல் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு காணொலி காட்சி வாயிலாக விசாரித்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், உள்ளிட்டோர் தங்கள் வாதங்களை பதிவு செய்தனர். அவற்றை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், கொரோனா பெரும்பரவல் காலத்தில் உயர்நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் காணொலி காட்சி விசாரணை நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அளிக்கப்படுவதாக தெரிவித்தது. கொரோனா பரவலை தடுக்க உரிய சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து நீதிமன்றங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காணொலி காட்சி விசாரணையில் வழக்காடிகளுக்கு உரிய ஏற்பாடுகளை நீதிமன்றங்கள் செய்து தரவேண்டும் என்றும், காணொலி காட்சி விசாரணைக்கு  உகந்த செயலியை உயர்நீதிமன்றங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. காணொலி காட்சி வாயிலான இந்த விசாரணை முறை, அடுத்த 15 நாட்களுக்கு தொடரட்டும் என்றும்,  அதன் பிறகு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.  



Next Story

மேலும் செய்திகள்