கொரோனா ஊரடங்கு எதிரொலி - "வரும் 7ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலம் ரத்து"- ஆட்சியர் கந்தசாமி

ஊரடங்கு எதிரொலியால், திருவண்ணாமலை கிரிவலம் இந்தமாதம் ரத்து செய்யப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு எதிரொலி - வரும் 7ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலம் ரத்து- ஆட்சியர் கந்தசாமி
x
ஊரடங்கு எதிரொலியால், திருவண்ணாமலை கிரிவலம் இந்தமாதம் ரத்து செய்யப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கந்தசாமி,  ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஜெப கூட்டம், தொழுகைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தமாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்