அவசர தேவைகளுக்காக வழங்கப்படும் அனுமதி -பழைய நடைமுறையே தொடரும் - தமிழக அரசு
திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பயணம் செய்பவர்களுக்கான பாஸ் வழங்கப்படுவதில் பழைய நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பயணம் செய்பவர்களுக்கான பாஸ் வழங்கப்படுவதில் பழைய நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் உத்தரவை ஏற்று மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் உள்ளிட்டோர் மட்டுமே பாஸ் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கும் முறை நீக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

