வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்கள் தயாரிப்பு: அரசின் அனுமதியை எதிர்பார்க்கும் தொழில் முனைவோர்

புற ஊதா கதிர்களைப் பயன்படுத்தி வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்களைத் தயாரிப்பதற்கு அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கோவையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்கள் தயாரிப்பு: அரசின் அனுமதியை எதிர்பார்க்கும் தொழில் முனைவோர்
x
கோவையை சேர்ந்த தொழில்முனைவோர் முத்து வெங்காளியப்பன், அரவிந்த் ஆகியோர் கணினி தொழில்நுட்பத் தீா்வு, ரோபோ தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைகள், வீடுகள், வாகனங்களில் இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றை புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி, ரோபோக்கள் மூலம் அழிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  மூன்று வகையான ரோபோக்களை தயாரித்து உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் இதுபோன்ற ரோபோக்கள்தான் பயன்படுத்தப்படுவதாகவும்,இதனை ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சத்துக்குள் தயாரித்து வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்