பிரத்தியங்கரா கோயிலில் மிளகாய் யாகம்

ஒசூர் அருகே மோரப்பள்ளியில் அமைந்துள்ள பிரத்தியங்கரா தேவி கோயிலில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தப்பட்டது.
பிரத்தியங்கரா கோயிலில் மிளகாய் யாகம்
x
ஒசூர் அருகே மோரப்பள்ளியில் அமைந்துள்ள பிரத்தியங்கரா தேவி கோயிலில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்தின்போது கொரோனா வைரஸ் போல படங்கள் வரைந்து, வேதமந்திரங்கள் ஓத அதனை தீயில் போட்டு  எரித்தனர். 

காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு யாகம் :

கும்பகோணம் மகாமக குளம்  அருகே அமைந்துள்ள காசி விஸ்வநாதர்   கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பல்வேறு வகையான மூலிகை பொருட்களை இட்டு யாகம் வார்க்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் கோயில் பணியாளர்கள் மட்டும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். 

கொரோனாவில் இருந்து விடுபட பூஜை : 

கொரோனா நோய் பாதிப்பில் இருந்து விடுபட, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏழு கோயில்களில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. யாகங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட கலச நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் கோயில் அர்ச்சர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து மீள வேண்டுதல் : 

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் நலம்பெற வேண்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தபடி வேத மந்திரங்கள் பாராயணம் செய்தனர். 

சிவன் கோயிலில் ஹோமம் : 

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில், கொரோனா நோயில் இருந்து விடுபட வேண்டி, சிறப்பு யாகம் நடைபெற்றது. கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். 

நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு யாகம் : 

நெல்லை மாநகரில் அமைந்துள்ள நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரால், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 

தியாகராஜர் கோயிலில் சிறப்பு யாகம் : 

திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் கோயிலில், குண்டம் அமைத்து சிறப்பு யாகம் வார்க்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டிய, கடவுளிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.  யாகத்தில் கலந்து கொண்ட 7 சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓதினர். 

Next Story

மேலும் செய்திகள்