கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்துதல் திட்டம் : 1.08 லட்சம் வீடுகளில் ஆய்வு - சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், 3 லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், 3 லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி, 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த 7 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் அனைத்து வீடுகளிலும், சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி12 மாவட்டங்களில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 677 வீடுகளில் ஆய்வு செய்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story

