கொரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கொரோனா வைரசை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
x
விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான கே.எம்.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், வீரம், பூரம், லிங்கம், பாதரசம், செந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே  சித்த மருத்துவத்தில் கொரோனா உள்ளிட்ட எல்லா வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர், வீடியோ கால் மூலம் விசாரித்தனர். இதனையடுத்து, கொரோனாவை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக  தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்