மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பேருந்து - அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு அனுமதி
பதிவு : மார்ச் 26, 2020, 12:42 PM
மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு இரண்டு அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 11 எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பணி காரணமாக நாகப்பட்டினத்தில் பணியாற்றுபவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நாகப்பட்டினத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், மற்றும் தொண்டு நிறுவனத்தினர், மருத்துவ பணிகளுக்காக செல்லுபவர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறையில் இருந்து இரண்டு பேருந்துகளை இயக்கியது. காலை 8மணிக்கு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்தில், அலுவலக பணிகளுக்காக செல்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு பயணம் செய்தனர். காவல்துறை சோதனைக்குப்பிறகு இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் அனைவரும் முகக்கவசம் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் நாகப்பட்டினத்திலிருந்து 5மணிக்கு இந்த பேருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை : தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

13 views

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் இன்று குணமடைந்தார்.

8 views

சிவகங்கை : கொரோனா நோய் பற்றிய மெகா ஓவியங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

4 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

5 views

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

10 views

ஊரடங்கால் டெல்லியில் குறைகிறது மாசு - தூய்மையான காற்றை சுவாசிக்கும் தலைநகர்வாசிகள்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.