"கொரோனா பரவல் விரைவில் குறையும்" - நோபல் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் நம்பிக்கை
பதிவு : மார்ச் 26, 2020, 11:56 AM
கொரோனா நோய்த்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என, நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று, உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று, விரைவில் முடிவுக்கு வரும் என,சீனாவின் நிலையை கணித்த நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

* சீனாவில், கொரோனா நோய்த்தொற்று லட்சக்கணக்கானோரை பாதிக்கும் என பல வல்லுநர்கள் கணித்தபோது, மைக்கேல் லேவிட், மிகத்துல்லியமாக தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.

* அதில் சீனாவில் 80 ஆயிரம் பேர் மட்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள் எனவும், அதில் 3250 பேர் வரை மட்டுமே உயிரிழக்க கூடும் என கணித்திருந்தார்.

* இதை மெய்ப்பிக்கும் வகையில் சீனாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 171 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3277 ஆகவும் இருந்தன

* இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் நாளேட்டுக்கு  அவர் அளித்த பேட்டியில் கொரோனா நோய்த்தொற்று படிபடியாக குறையும் என கூறியுள்ளார்.

* 78 நாடுகளில் நாள் தோறும் 50 பேருக்கு நோய்தொற்று ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

* இத்தாலியில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவியதற்கு, அந்த நாட்டில் நிலவும் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையே மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

* சளி, காய்ச்சல் ஏற்பட்ட பலருக்கு  கொரோனா சோதனை செய்ய முடியாமல் போனதாலேயே உயிரிழப்புகள் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* சர்வதேச அளவில் தற்போது சீனா கையாண்ட மக்களை தனிமைப்படுத்தும் முறை கையாளப்படுவதால்,பெருமளவில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* கொரோனா வைரஸ் புதிதாக உருவான வைரஸ் என்பதால், அதற்கு மருந்து கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும், எல்லாம் விரைவில் சரியாகி விடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்

* இந்த கொரோனா, லட்சக்கணக்கானோரை பலி கொல்லாது என கணித்துள்ள நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான் மைக்கேல் லேவிட், நோய்த்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவிய வுஹான் நகரில் அந்த நோய் மேலும் பரவாமல் சீனா அரசு கட்டுப்படுத்தியது எப்படி?...

கொரோனா நோய்த்தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனா, பெருமளவில் உள்ள மக்கள் தொகைக்கு மத்தியில், நவீன அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டெழுந்து இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி ஷாங்காய் நகரைச் சேர்ந்த மருத்துவர்கள் விவரமான குறிப்புகளை பதிவு செய்துள்ளனர்.

676 views

சீனாவில் இயல்பு நிலை திரும்பிய பல நகரங்கள் - குறைந்த மக்கள் நடமாட்டம்

கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

223 views

சாலைகளை முடக்கிய கர்நாடக அரசு : பிரதமரிடம் முறையிட முடிவு- பினராயி விஜயன்

கர்நாடகவிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் உட்பட அத்யாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பாதைகளை கர்நாடக அரசு மண்ணை கொட்டி மூடியுள்ளது.

39 views

பிற செய்திகள்

அரைக் கம்பத்தில் பறந்த சீன தேசிய கொடி - கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மவுன அஞ்சலி

சீனாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது.

10 views

சீனாவின் வுஹான் போல் ஸ்பெயினின் மாட்ரிட் - 28 நாள் ஊரடங்கு - வெறிச்சோடிய வீதிகள்

சீனாவின் வுஹான் நகரை போல் கொரோனாவின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்பெயின் மாட்ரிட் நகரம்.

8 views

இத்தாலி மக்கள் பணத்தை வீசி எறிந்தார்களா?

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

529 views

நிதிச்சிக்கலில் டிரம்ப் குடும்ப நிறுவங்கள்...

கொரோனா அச்சுறுத்தலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு சொந்தமான தொழில் நிறுவனங்களும் தப்பவில்லை.

29 views

கொரோனாவில் இருந்து சீனா தப்பிய விதம் - சீனாவின் முன்னுதாரணத்தை பின்பற்றும் நாடுகள்

மக்கள் பற்றிய தரவுகளின் அடிப்படையில் அவர்களை கண்காணித்து கொரோனாவை சீனா வென்று காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது ..

45 views

சர்வதேச பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் வீட்டிலேயே நடத்த திட்டம்

சர்வதேச பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான தேர்வினை, மாணவர்கள் வீட்டிலேயே எழுதுவதற்கு அனுமதிக்க உள்ளதாக, தேர்வினை நடத்தும் சர்வதேச கல்வி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.