தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.112 குறைந்தது: ஒரு சவரன் தங்கம் ரூ.31,616 க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 31 ஆயிரத்து 616 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் 3 ஆயிரத்து 952 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.112 குறைந்தது: ஒரு சவரன் தங்கம் ரூ.31,616 க்கு விற்பனை
x
தங்கம் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 31 ஆயிரத்து 616 ரூபாயாக விற்பனையாகிறது.  ஒரு கிராம் 3 ஆயிரத்து 952 ரூபாயாக உள்ளது. முன்னதாக, இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் விலை குறைந்த நிலையில், மாலை 72 ரூபாய் விலை குறைந்துள்ளது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக வர்த்தகமாகி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து தங்க நகை கடைகளையும் மூட, இந்திய தங்க விற்பனை மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்