உற்பத்தி குறைந்ததால் முட்டை விலை உயர்வு: கொள்முதல் விலை ரூ.2.25 காசுகளாக அதிகரிப்பு

உற்பத்தி குறைந்ததன் காரணமாக முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது.
உற்பத்தி குறைந்ததால் முட்டை விலை உயர்வு: கொள்முதல் விலை ரூ.2.25 காசுகளாக அதிகரிப்பு
x
உற்பத்தி குறைந்ததன் காரணமாக முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது. இதையடுத்து முட்டை விலை 2 ரூபாய் 25  காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக உருவான வதந்தியால், முட்டை விற்பனை குறைந்த நிலையில், 18 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்தன. இந்த நிலையில், முட்டை விலையை ஒரு ரூபாய் 95 காசுகளாக நிர்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது. இதையடுத்து முட்டை நுகர்வு அதிகரித்த நிலையில், பண்ணையாளர்கள் உற்பத்தியை  40 சதவீதம் குறைத்துள்ளனர். தேவை உயர்ந்து, உற்பத்தி குறைந்துள்ளதை அடுத்து, முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்