எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்
பதிவு : மார்ச் 23, 2020, 08:56 AM
எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் ஊழியரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் இருந்து மார்ச்13 ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு விஷ்வ விஜய் என்ற கப்பல் வந்துள்ளது. மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பலில் பணியாற்றிய உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தலைமை இயந்திர அதிகாரி நரேஷ்குமாரை 14 ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது.  கப்பல், எண்ணுார் துறைமுகம் வந்தடைந்ததும் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் நரேஷ் குமார் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் கப்பல் நிறுவன மேலாளர் புகார் அளித்துள்ளார்.

பிற செய்திகள்

கடந்த 24 மணி நேரமாக நீடித்த துப்பாக்கிச் சண்டை : காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பத்புரா பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைய முயன்ற 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலைப்பட்டனர்.

19 views

தூய்மை பணியாளர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.

21 views

"கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை" - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

29 views

தமிழகத்தில் 2,200 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீடுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டதால் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

26 views

"கொரோனா வைரஸ் பரவல் : ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்" - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

310 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

143 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.