ஹாசினி மரணத்தை போல மீண்டும் ஒரு பயங்கரம் - 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொன்று 3வது மாடியில் இருந்து வீசிய கொடூரம்
பதிவு : மார்ச் 22, 2020, 12:53 AM
சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த 10 வயதான சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். பார்ப்பதற்கு துறுதுறுவென சுற்றித் திரியும் அந்த சிறுமியிடம் குடியிருப்பில் இருந்த அனைவருமே அன்பாக பழகி வந்துள்ளனர். 

ஆனால் அதே குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ் என்ற 29 வயதான இளைஞரின் பார்வையோ வேறு ரகமாக இருந்துள்ளது. சிறுமியிடம் அவ்வப்போது பேச்சுக் கொடுத்து வந்த அவரை அப்போது யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. 

சம்பவத்தன்று பெற்றோர் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த வேளையில் சிறுமி கழிவறை செல்வதற்காக வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். பொதுவான கழிவறை உள்ள குடியிருப்பு என்பதால் சிறுமி வந்ததை பார்த்த சுரேஷ், அவரை வாயைப் பொத்தி அழைத்துச் சென்றுள்ளார். 

சிறுமியை பாலியல் வன்முறை செய்த சுரேஷ், அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்துள்ளார். யாருக்கும் தெரிந்துவிட்டால் ஆபத்து என கருதிய அவர், உடனே தலையணையை வைத்து முகத்தை அழுத்தியதோடு அவரை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார். 

இதனிடையே சிறுமியை காணாத பெற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததோடு சிறுமியையும் தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் சிறுமி ரத்தக்காயங்களோடு விழுந்து கிடந்துள்ளார். உடனே பதறிப்போன அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் சுரேஷ் ஈடுபட்டதும் கொடூரமாக கொன்றதும் உறுதியானது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஹாசினி மரணத்தை போல இப்போது மீண்டும் ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிர்பயா சம்பவம், தெலங்கானா என்கவுன்ட்டர் என தண்டனைகள் ஒரு பக்கம் நடந்தாலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருவது சமூக அவலமே... 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

342 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

86 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

29 views

பிற செய்திகள்

தட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு

மாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

9 views

மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

19 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

36 views

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

19 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

119 views

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

329 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.