பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பிள்ளைகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாயை பறிகொடுத்த 4 பிள்ளைகள் வாழ வழியின்றி பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பிள்ளைகள்
x
பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாயை பறிகொடுத்த 4 பிள்ளைகள் வாழ வழியின்றி பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.தென்காசி மாவட்டம் நடுவப்பட்டி அருகே உள்ள மைப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

ஜெயக்குமார் குடிபோதைக்கு அடிமையான நிலையில் கூலி வேலைக்கு சென்றாலும் அந்த பணத்தில் குடித்து வந்துள்ளார். இதனால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஜெயபாரதி பட்டாசு வேலைக்கு சென்றார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறையில் பட்டாசு கம்பெனியில் ஜெயபாரதி வேலை பார்த்து வந்தார். 

இந்த ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஜெயபாரதி உயிரிழந்தார். இதனால் அவரது 4 பிள்ளைகளும் தாயை இழந்து பரிதவித்து வருகின்றனர். 19 வயதான மூத்த மகள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதோடு, மற்ற பிள்ளைகளும் தாயை எதிர்நோக்கியே காத்திருந்தனர். 

குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒரு பக்கம், தாய் உயிரிழந்த சோகம் என எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த பிஞ்சுகளின் மனதில் பெரிய போராட்டத்தை உருவாக்கி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்