கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டெடுப்பு

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டெடுப்பு
x
சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 
ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அமர்ந்த நிலையிலான எலும்புக்கூடு ஒன்று புதைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான குழு ஆய்வினை மேற்கொண்டு வரும் நிலையில் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கை எலும்புகள் கிடைத்துள்ள நிலையில் தொடர்ந்து ஆய்வு செய்த பிறகே மற்ற விபரங்கள் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்