வரும் 31ஆம் தேதியுடன் முடிகிறது டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்காலம்

டிஎன்பிஸ்சி தலைவராக உள்ள அருள்மொழியின் பதவிக்காலம், வரும் 31 ம் தேதியுடன் முடியும் நிலையில், புதிய தலைவர் மற்றும் காலியாக உள்ள 11 உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்பவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வரும் 31ஆம் தேதியுடன் முடிகிறது டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்காலம்
x
அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் அல்லது தலைவர் பதவிக்கு வருபவர்கள், ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயது, இவற்றில் எது முதலில் பூர்த்தியாகிறதோ, அதுவரை பதவி வகிக்கலாம். தேர்வாணையத்தில், 14 உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. இதில், 11 இடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கின்றன. மேலும், தற்போது தலைவர் பதவியில் உள்ள அருள்மொழியின் பதவிக்காலம் வரும் 31 ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், கால தாமதமின்றி, புதிய தலைவர் மற்றும் 11 உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போட்டித்தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்