கர்ப்பிணி மனைவி தூக்கு போட்டு தற்கொ​லை - மனைவியின் சடலத்தை பார்த்து கணவனும் தற்கொலை
பதிவு : மார்ச் 21, 2020, 08:00 AM
கடலூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை  சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டரான இவர் மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 

திருமணமான நாளில் இருந்த வேலைக்கு போகாமல் இருந்து வந்த மணிகண்டன், குடிபோதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. கணவருக்கு பலமுறை அறிவுரை கூறியும் அவர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. 3 மாதம் கர்ப்பமாக இருந்த மகேஸ்வரின் கணவரின் செயலால் விரக்தியில் இருந்துள்ளார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு குடிபோதையில் வந்த மணிகண்டன், மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி, தன் கணவனை திருத்த முடியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கர்ப்பிணியாக இருந்த போதிலும் மனைவி தற்கொலை செய்வதை அறியாத அளவுக்கு போதையில் மூழ்கி கிடந்தார் மணிகண்டன். காலையில் போதை தெளிந்ததும் எழுந்த அவர், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் இந்த முடிவுக்கு தானே காரணம் என விரக்தியடைந்த அவர், தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வீடு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன், மனைவி இறந்து கிடப்பது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

144 தடை உத்தரவை மீறி சுற்றி திரிந்த இளைஞர்கள் - தோப்பு கரணம் போட சொல்லி போலீசார் தண்டனை

144 தடை உத்தரவை மீறி கடலூரில் மாலை 6 மணிக்கு மேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் மடக்கினர்.

20 views

பிற செய்திகள்

தேவையில்லாமல் சாலையில் சுற்றியவர்களுக்கு தண்டனை

விழுப்புரத்தில் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த இளைஞர்களை தங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யுமாறு போக்குவரத்து காவலர்கள் தண்டனை வழங்கினர்.

21 views

திருப்பதியில் பக்தர்கள் இல்லாத ராமநவமி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழக்கமாக பக்தர் வெள்ளத்திற்கு நடுவே நடைபெறும் ராமநவமி, இம்முறை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்கும் விதத்தில் நடைபெற்றது.

4 views

முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

7 views

போலீசார், செவிலியர்களுக்கு உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிகையில் ஈடுபட்டுள்ள காவல்துறை, தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் விதமாக, விஜய் ரசிகர் மன்றும் சார்பில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

14 views

தந்தி டிவி செய்தி எதிரொலி : நாடோடி மக்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் உணவின்றி தவித்து வந்த தெலங்கானா மாநில நாடோடி மக்களுக்கு, தந்தி டிவி செய்தி எதிரொலியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

16 views

ஒடிசா தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் தமமுக-வினர்

கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.