"வீடற்றவர்கள் அரசு காப்பகங்களில் தங்கலாம்" - சென்னையில் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னையில் வீடற்றவர்கள் கொரோனோ வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அரசு காப்பகங்களில் தங்கிக் கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வீடற்றவர்கள் அரசு காப்பகங்களில் தங்கலாம் - சென்னையில் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
x
சென்னையில் வீடற்றவர்கள் கொரோனோ வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அரசு காப்பகங்களில் தங்கிக் கொள்ளலாம் என்று  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வரும் 22 ந்தேதி பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் மாநகராட்சியின் கீழ் உள்ள 51 காப்பகங்களில் வீடற்றவர்கள் தங்கலாம் என்றும், அவர்களுக்கு  மாநகராட்சியின் சார்பில்  உதவிகள்  வழங்கப்படும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில்  மெரினா உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் உறங்கும் வீடற்றவர்களுக்கு கொரோனோ குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை என்ற செய்தி தொகுப்பு தந்தி டிவியில் அண்மையில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்