பிறந்த 6 நாளில் எருக்கம்பால் கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம்...
பதிவு : மார்ச் 20, 2020, 02:40 AM
தேனி அருகே பிறந்து 6 நாளில் பெண் குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கவிதா. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் 3வதாக கருவுற்ற கவிதா தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என ஆசையோடு எதிர்பார்த்திருந்தார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி கவிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை ஆசையில் இருந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியான அவர், குழந்தையை வெறுக்க தொடங்கி இருக்கிறார். 

இதனிடையே கடந்த 2ஆம் தேதி குழந்தை திடீரென இறந்துவிட்டதாக கூறி வீட்டுக்கு அருகே குழி தோண்டி புதைத்து இருக்கிறார் கவிதா. ஆனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் எழவே, மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு குழந்தைகள் நல அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்திய போதுதான் நடந்த சம்பவங்கள் எல்லாம் வீதிக்கு வந்தது. 3வதாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த கவிதாவும், அவரது மாமியார் செல்லம்மாளும் சேர்ந்து எருக்கம்பால் கொடுத்து கொன்றதாகவும் தெரியவந்தது. 

3 பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது எப்படி? என கேட்டு தன் மருமகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார் செல்லம்மாள். இதனால் விரக்தி மனநிலையில் இருந்த கவிதா, தன் மாமியாருடன் சேர்ந்து பிஞ்சு குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொன்றுள்ளார். பின்னர் குழந்தையை வீட்டுக்கு அருகில் குழி தோண்டி புதைத்து விட்டு எதுவும் நடக்காதது போல இருந்துள்ளார். போலீசாரிடம் கவிதாவும், அவரது மாமியார் செல்லம்மாள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 

குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரையில் இதே போல் பெண் சிசுக்கொலை நடந்தது. அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்த நிலையில் தற்போது தேனியில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 

கள்ளிப்பாலும், எருக்கம்பாலும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக்குடிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது... 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

664 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

197 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

149 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

55 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

28 views

பிற செய்திகள்

ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகள் துவங்க வாய்ப்பு: 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பரில் துவங்கும் - 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் தொடங்கும்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 views

சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வாங்கி சென்ற இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 views

செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

5 views

தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்கு - தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நடவடிக்கை

கும்பகோணத்தில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

4 views

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்த கூறி திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

8 views

ஊட்டியில் கோமாவில் இருந்த சிறுத்தைக்கு நினைவு திரும்பியது

ஊட்டியில் கோமா நிலையிலிருந்த சிறுத்தை புலிக்கு, 12 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.