மது குடித்தால் கொரோனா வராதா? - கொரோனா வைரஸை கொல்லும் ஆல்கஹால் என மீம்ஸ்

மதுபானங்களை குடிப்பதால் கொரோனா அண்டாது என மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் இது உண்மைதானா? என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
மது குடித்தால் கொரோனா வராதா? - கொரோனா வைரஸை கொல்லும் ஆல்கஹால் என மீம்ஸ்
x
மதுபானங்களை குடிப்பதால் கொரோனா அண்டாது என மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் இது உண்மைதானா? என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...கொரோனா தொடர்பான அச்சம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மதுவை வைத்து உலா வரும் மீம்ஸ் வகைகளும் அதிகம். ஆல்கஹால் கொரோனா வைரஸ்க்கு எமன் என்பது போன்ற வாசகங்களை முன்வைத்து வெளியாகும் மீம்ஸ்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் இப்போதைக்கு டிரெண்டிங்கிலும் இருக்கிறது. 

கோயில்கள், பள்ளிகள், மால்கள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடையை அரசு மூடாததற்கு இதுதான் காரணம் என குதூகலிக்கும் மதுப்பிரியர்களும் உண்டு... கொரோனா வைரஸ் குறித்து மீம்ஸ்களின் கதாநாயகனான நடிகர் வடிவேலு கூறிய கருத்தும் அதை சார்ந்தது தான்... 

ஆனால் இதுபோன்ற வதந்திகளை எல்லாம் புறந்தள்ளுங்கள் என்கிறது சுகாதாரத்துறை. மது குடிப்பதால் உடல் நலன் தான் கெட்டுப்போகுமே தவிர, கொரோனா வைரஸை ஒழிக்காது என்கிறார்  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.... 

உடல் உறுப்புகளை பலவீனமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க செய்யும் ஆல்கஹால் கொரோனாவை எப்படி ஒழிக்கும் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. 


சமூக வலைத்தள​ங்களில் இதுபோல் உலவும் இதுபோன்ற செய்திகளின் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மையை அறிந்து அதை பின்பற்றுவது எப்போதும் நல்லது... 


Next Story

மேலும் செய்திகள்