பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் : ஆசை காட்டி மோசடி செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

கோவையில் மக்களிடம் பண ஆசை காட்டி 25 கோடி ரூபாய் வரை மோசடி செய்த முன்னாள் ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் : ஆசை காட்டி மோசடி செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
x
கோவையில் மக்களிடம் பண ஆசை காட்டி 25 கோடி ரூபாய் வரை மோசடி செய்த முன்னாள் ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.  கோவையில் போத்தனூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கிளாரா விண்ணரசி. இவர்களுக்கு கடந்த 
2017ல் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான மணி என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு தான் ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், இங்கு முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார் மணி... 

முதலீட்டு தொகைக்கு ஏற்றார்போல பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என மணி கூறியதை கேட்ட கிளாரா விண்ணரசி, 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு பணம் எதுவும் தராமல் இருந்து வந்ததோடு, முதலீடு பணத்தை பற்றி கேட்ட போதெல்லாம் அலட்சியமாக பதில் கூறி வந்துள்ளார் மணி. 

இதனால் சந்தேகமடைந்த கிளாரா விண்ணரசி, நேரில் சென்று கேட்ட போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. உடனே அவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கிளாரா மட்டுமின்றி நூற்றுக் கணக்கானவர்களிடம் மணி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி இதுவரை 25 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்திருப்பதாக கூறியிருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேநேரம் தங்கள் பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்களும் குவிந்து வருகின்றனர். மணிக்கு உடந்தையாக இருந்த ம​ஞ்சுநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்... 

தினம் தினம் மோசடிகளை செய்திகளை பார்த்தாலும் கூட, பணத்தாசையால் மோசடி பேர்வழிகளை நம்புவதால் பணத்தையும் நிம்மதியையும் இழப்போம் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று... 


Next Story

மேலும் செய்திகள்