உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில், தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
x
சாதி மறுப்புத் திருமணம் செய்த உடுமலை சங்கர், பட்டப் பகலில் அங்குள்ள பேருந்து நிலையம் அருகே கழுத்தை அறுத்தும், தாக்கியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த அவர்கள், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்