தனியார் பொறியியல், மருத்துவக் கல்விக் கட்டண நிர்ணயம் : தனியார் கல்வி நிறுவன கருத்துகளை பெற்று முடிவு

பொறியியல், மருத்துவம் மற்றும் சட்ட பாடப் பிரிவுகளுக்கு வகுப்புகள் தொடங்கும் முன்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.
தனியார் பொறியியல், மருத்துவக் கல்விக் கட்டண நிர்ணயம் : தனியார் கல்வி நிறுவன கருத்துகளை பெற்று முடிவு
x
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவம், சட்டம், பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம், கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்படுகிறது. இக்குழு நிர்ணயம் செய்யும் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். அதன்படி,    2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இந்நிலையில், குழுவின் புதிய தலைவராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உணவக மேலாண்மை படிப்புகளுக்கான கட்டணம்​குறித்து கல்லூரிகளிடம் கருத்துகள் பெறப்பட்டு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகவும் வரவு, செலவு அறிக்கை, வங்கிக் கணக்கு அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்