கொரோனா வைரஸ் : டாஸ்மாக்கை மூடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

கொரோனா வைரஸ் எதிரொலியாக டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் : டாஸ்மாக்கை மூடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
x
சுகாதாரமற்ற டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளதால், அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக கூறி, டாஸ்மாக் கடைகளை மூடுமாறு வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, மாநிலம் முழுவதும் உள்ள பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தன்னை எதிர் மனு தாரராக சேர்க்குமாறு மனு செய்த முருகன் என்பவர், குடிப்பழக்கம் நாள்பட்ட நோய் என்பதால், ஒரே நாளில் நிறுத்துவது திடீர் எதிர்விளைவை ஏற்படுத்தும் என கூறினார். டாஸ்மாக் கடைகளை மூடு வலியுறுத்தும் மனுவை தள்ளுபடி செய்யுமாறும் அவர் கூறியுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரிக்கபடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Next Story

மேலும் செய்திகள்