ஒரே நாளில் 11 செல்போன் திருட்டு : ஆந்திர இளைஞர்கள் 2 பேர் கைது
பதிவு : மார்ச் 18, 2020, 02:41 AM
சென்னையில் ஒரே நாளில் 11 செல்போனை திருடிய ஆந்திர மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஒரே நாளில் 11 செல்போனை திருடிய ஆந்திர மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.  சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் நூதனமான முறையில் செல்போன் திருடப்பட்டது. இதுதொடர்பான புகார்கள் அதிகம் வந்த நிலையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். 

அப்போது செய்தித்தாளை கையில் வைத்துக் கொண்டு நூதனமான முறையில் செல்போனை 2 பேர் திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தியதில் இருவரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. 

வெங்கடேசன், தமிழ்குமார் என 2 பேர் செல்போனை திருடிக் கொண்டிருக்கும் போதே கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 11 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் மேலும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 

செல்போன் திருட மேற்கு கோதாவரி உள்ளிட்ட பகுதிகளில் பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்டதும், வார இறுதி நாட்களில் சென்னைக்கு வந்து இங்கு கைவரிசை காட்டி விட்டு அந்த செல்போன்களை எல்லாம் ஆந்திராவிற்கு கொண்டு சென்று விற்பதும் தெரியவந்தது. கைதான 2 பேரும் 2016 ஆம் ஆண்டு முதல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. 


தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

720 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

373 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

94 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

72 views

பிற செய்திகள்

"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

23 views

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

14 views

"இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன?" : மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கினால், மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒரு வாரத்தில் விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

50 views

அரிசி உள்ளிட்ட மளிகை பொருள் - 120 குடும்பங்களுக்கு போலீசார் வழங்கினர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் போலீசாரால் வழங்கப்பட்டது.

51 views

"சென்னையில் கொரோனா பதற்றப் பகுதி இல்லை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

415 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.