"தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம்" - இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரசன் வலியுறுத்தல்
தனியார் துறையிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்ட திருத்தத்தை, மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் துறையிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்ட திருத்தத்தை, மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சிகள் மதத்தை முன்னிறுத்தினால், மீண்டும் ஒரு சுதந்திரபோர் நடைபெறும் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவது அரசின் கடமை என்ற செ.கு.தமிழரசன், மக்களை துண்டாடும் செயலில் ஈடுபட கூடாது என கூறினார்.
Next Story

