சர்வதேச பெண்கள் தினம் : பழைய 25 பைசா கொண்டு வந்த பெண்களுக்கு பிரியாணி
உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பழைய 25 பைசா கொண்டு வந்த 100 பெண்களுக்கு பிரியாணி வழங்கி தனியார் ஓட்டல் அசத்தியுள்ளது.
உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பழைய 25 பைசா கொண்டு வந்த 100 பெண்களுக்கு பிரியாணி வழங்கி தனியார் ஓட்டல் அசத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள முஜிப் பிரியாணி ஹோட்டல் உரிமையாளர், உலக பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில், பழைய 25 பைசா நாணயம் கொண்டு வரும் பெண்களுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை பிரியாணி கடைக்கு 25 பைசா கொண்டு வந்த பெண்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பெண்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்ததால் கூடுதலாக 50 பெண்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
Next Story

