கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு - நாமக்கல்லில் முன் எச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் கோழிகளை பறவை காய்ச்சல் தாக்கியதைத் தொடர்ந்து கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு - நாமக்கல்லில் முன் எச்சரிக்கை நடவடிக்கை
x
கேரளாவில் கோழிகளை  பறவை காய்ச்சல் தாக்கியதைத் தொடர்ந்து கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில்  இருந்து கோழி தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்களை நுழைவு வாயில் அருகே நிறுத்தி நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்ட பிறகே  பண்ணைகளுக்குள் அனுமதிக்கின்றனர். வேலைக்கு வரும் தொழிலாளர்கள் சுத்தமாக இருக்கும் வகையில், அவர்கள் தண்ணீரில் முகம், கை, கால்களை நனைத்துவிட்டு, பாதுகாப்பு கவச உடை அணிந்த பிறகே பண்ணைக்குள்  நுழையும் வழக்கத்தையும் கடைபிடிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்