போலீசாரிடம் கடத்தல் நாடகம் ஆடிய இளம்பெண் - தேர்வுக்கு பயந்து, தமிழகம் வந்தது கண்டுபிடிப்பு

பெங்களூரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணை, சென்னை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
போலீசாரிடம் கடத்தல் நாடகம் ஆடிய இளம்பெண் - தேர்வுக்கு பயந்து, தமிழகம் வந்தது கண்டுபிடிப்பு
x
பெங்களூரில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணை, சென்னை பூக்கடை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, காரின் கதவை உதைத்துவிட்டு, அவர் தப்பி வந்ததாக கூறப்பட்டது. விசாரணையில், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவன அதிபர் ரமேஷ் என்பவரின் மகள் என்பது தெரியவந்தது. முதலில் கடத்தப்பட்டதாக கூறிய நிலையில், சென்ட்ரல் ரயில் நிலை சிசிடிவி காட்சி ஆய்வு செய்தபோது, அந்த இளம்பெண், ரயில் மூலம் சென்னை வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வேதியியல் தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமானது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்த போலீசார், அவர்களிடம் இளம் பெண்ணை ஒப்படைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்