அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் விவகாரம் - உயர் நீதிமன்றத்தில் திமுக குற்றச்சாட்டு
அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் மட்டும் வாபஸ் பெறப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.
அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, செந்தில் பாலாஜி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி சதீஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2011-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் தற்போது வரை நிலுவையில் இருப்பதாகவும், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளை மட்டும் அரசு வாபஸ் பெறுவதாக குற்றம்சாட்டினார். இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
Next Story

