அன்பழகன் மறைவு - ஸ்டாலின் இரங்கல் கவிதை

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் கவிதை எழுதியுள்ளார்.
அன்பழகன் மறைவு - ஸ்டாலின் இரங்கல் கவிதை
x
திராவிட சிகரம் சரிந்து விட்டது என தன் கவிதையை தொடங்கியுள்ள ஸ்டாலின், கழக தொண்டர்களை எப்படி தேற்றுவது என தன் வேதனையை வெளிக்காட்டியுள்ளார். 


பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர், கருணாநிதியை தாங்கும் நிலமாக இருந்தவர் என புகழாரம் சூட்டிய ஸ்டாலின், தனக்கும் சிறகை விரிக்க வானமாய் இருந்தவர் என கூறியுள்ளார். 


கருணாநிதிக்கு அண்ண‌னாகவும், தனக்கு பெரியப்பாவாகவும் இருந்த அன்பழகன், கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தான் தலைவர் என்று முதலில் கூறியவர் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

தந்தையான கருணாநிதி மறைந்தபோது, பெரியப்பாவாக அன்பழகன் இருக்கிறார் என்று ஆறுதல் அடைந்த‌தாகவும், இன்று அவரும் மறைந்துவிட்டதால், என்ன சொல்லி தேற்றிகொள்வது என ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 


இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன், யாரிடம் பாராட்டு பெறுவேன் என வேதனை தெரிவித்துள்ள ஸ்டாலின், அன்பழகன் ஊட்டிய அறிவொளியில் பயணம் தொடரும் என கண்ணீருடன் கவிதையை முடித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்