சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா : வீதி உலா வந்த சுவாமி சண்முகர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா எட்டாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா எட்டாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். கடந்த மாதம் 28 ஆம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குமரவிடங்க பெருமானும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இந்நிலையில் எட்டாம் நாளில் சுவாமி பெரிய வெள்ளி சப்பரத்தில் தையல் நாயகி வகையறா மண்டபத்திலிருந்து எழுந்தருளி எட்டு திரு வீதிகளிலும் உலா வந்தார்.
Next Story

