லஞ்சம் கொடுக்க மறுத்தவரை பெண் ஏட்டு அடித்த விவகாரம் - பெண் ஏட்டு வேறு காவல் நிலையத்துக்கு மாற்றம்
கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவர் புகார் அளிக்க வரும் நபர்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் கொடுக்க மறுத்தால் அடிப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவர் புகார் அளிக்க வரும் நபர்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் கொடுக்க மறுத்தால் அடிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளிக்க வந்த நபரை அவர் சரமாரியாக தாக்கி உள்ளே இழுத்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த புகாரின் பேரில் கிருஸ்ணவேணி என்ற அந்த பெண் ஏட்டு தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தவிட்டதை அடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
Next Story

