"ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை" - மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை
மக்கள் மன்றத்தினர் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள ரஜினி, மாவட்ட செயலாளர்கள் அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் மன்றத்தினர் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள ரஜினி, மாவட்ட செயலாளர்கள் அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திர மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை, நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்தார். ஓராண்டுக்கு பிறகு நிகழ்ந்த இந்த சந்திப்பில், 36 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவது, புதிய கட்சியை எப்போது அறிவிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இந்த சந்திப்பின் போது, ஒரு விஷயம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் அது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்தார். நேரம் வரும் போது, அதுபற்றி தெரிவிப்பேன் என்றும் கூறினார்.
Next Story

