தலைமை காவலரிடம் ரூ.25 லட்சம் மோசடி - ரவுடி கைது, கார்,அரிவாள் பறிமுதல்
அம்பத்தூரில் காரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பத்தூரில் காரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்கரணையை சேர்ந்த கஜேந்திரன் மீது ஆறு கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த இவர், தலைமை காவலரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி 23 லட்சம் மோசடி செய்துள்ளார். அம்பத்தூரில் காரை கடத்தி சென்று 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது என தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை கைது செய்த பீர்க்கங்கரணை போலீசார், அரிவாள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
Next Story

