துணைவேந்தர் தேடுதல் குழு - ஸ்டாலின் கண்டனம்
சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை நியமித்து இருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டு கொள்ளாமல், அலட்சியமாக இருந்த துணைவேந்தருக்கு, பரிசு வழங்கிக் கௌரவிப்பதைப் போல, இந்தப் பதவியை அளித்திருப்பது மிகவும் மோசமான முன்னுதாரணம் என தெரிவித்துள்ளார்.
* கல்வி வல்லுநர்கள் சிறந்து விளங்கும் தமிழகத்தில், ஒரு துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுத் தலைவர் பதவிக்கு, தகுதியுள்ள - பொருத்தமானவர் யாரும் கிடைக்கவில்லை என்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
* எனவே, தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரைத் தேடுதல் குழு தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story