புதிதாக திறக்கப்பட்ட காய்கறி கடைகளுக்கு சீல் - பழைய வாடகை பாக்கி உள்ளதால் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், புதிதாக திறக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், புதிதாக திறக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகள், இதற்கு முன்பாக தற்காலிக கடை அமைத்திருந்த இடத்திற்கு, 60 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி தர வேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மார்க்கெட்டை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கடந்த 8 நாட்களுக்கு முன்புதான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

