இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடலில் இருந்து மீட்ட அதிகாரிகள்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கடலோர காவல் படை மற்றும் மத்திய சுங்க வருவாய் துறை அதிகாரிகளும் இணைந்து கடலில் இருந்து மீட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடலில் இருந்து மீட்ட அதிகாரிகள்
x
இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய சுங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து நேற்று மண்டபம் வேதாளை கடற்பகுதியை கண்காணித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த படகில் மண்டபம் மரைக்காயர் பட்டினம் பகுதியை சேர்ந்த பரூக் மற்றும் ஆஷிக் ஆகியோரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம்  நேற்று முழுவதும் விசாரணை நடத்தி உள்ளனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாகவும், அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்கத்தை கடலில்  போட்டுவிட்டு குறிப்பிட்ட பகுதியை ஜி.பி.எஸ். மார்க்கில் பதிவு செய்து கொண்டதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து மணலி தீவு பகுதியில் போடப்பட்ட 15 கிலோ தங்கத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய்  என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  தங்க கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது விரைவில் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்